குடியுரிமை சட்டத்திகு எதிராக தீர்மானம் கொண்டு வர பயம்- துரைமுருகன்
- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
- குடியுரிமை சட்டத்திகு எதிராக தீர்மானம் கொண்டு வரஅதிமுக பயப்படுகிறது என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டம் அண்மையில் கொண்டுவரப்பட்டது.இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒரு சேர கிளம்பி வருகிறது.இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய நாள் முதலே மனு மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்க கோரி திமுகவினர் முறையிட்டு வந்தனர்.
எனவே சட்டசபை கூட்ட தொடரின் கடைசி நாளான நேற்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக கொண்டு வந்த தீர்மானம் மீது விவாதிக்காமல் இருந்ததை கண்டித்தனர்.இதற்கு இடையில் இதுகுறித்து திமுக பொருளாளர் துரை முருகன் கூறுகையில் ,குடியுரிமை சட்டத்திகு எதிராக தீர்மானம் கொண்டு வர அதிமுக பயப்படுகிறது .ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மம்தா பானர்ஜி போன்றவர்களுக்கு உள்ள தைரியம் கூட அதிமுகவுக்கோ, பழனிசாமிக்கோ இல்லை என்று தெரிவித்தார்.