இடைத்தேர்தலில் போட்டியிட அமமுக , மநீம கட்சிகளுக்கு பயம்-அமைச்சர் தங்கமணி
இடைத்தேர்தலில் அமமுக , மநீம கட்சிகள் போட்டியிடாதது அவர்களின் பயத்தை காட்டுகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.அதேபோல் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் அறிவித்தார்.
இந்த நிலையில் நாமக்கல்லில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமமுக , மநீம கட்சிகள் போட்டியிடாதது அவர்களின் பயத்தை காட்டுகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.