தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் ! மீண்டும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்த கனிமொழி
தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் மீண்டும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார் கனிமொழி.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் இதற்கு நீதி வேண்டும் அரசியல் கட்சியினர்,சினிமா பிரபலங்கள்,விளையாட்டு பிரபலங்கள் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்பி. கனிமொழி தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் ஏற்கனவே புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் திமுக எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ்,பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் மீண்டும் புகார் அளித்துள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.
I have sent another letter to @India_NHRC seeking immediate action on #Sathankulam custodial deaths
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ்,பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 1/2 #JusticeForJeyarajAndBennicks pic.twitter.com/q6MZwHi0LD
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 29, 2020