74-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி பாளையங்கோட்டையில் ஆயுதப்படை ஆய்வாளர் மகேஸ்வரி தனது தந்தை இறந்த நிலையிலும், நாட்டிற்காக கடமையை ஆற்றியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று 74-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதற்கு முன்னதாக அவர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த அணிவகுப்பை ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையேற்று நடத்தினார். இந்த நிலையில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரியின் தந்தை நாராயணசுவாமி திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் நேற்று இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இன்று காலை 8 மணிக்கு சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தனது கடமை தவறாத காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தந்தை இறந்ததை யாரிடமும் சொல்லாமல் அணிவகுப்பை முடித்து கொண்டு, பின்னர் தந்தை துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு புறப்படுவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இதனால் அங்கிருந்த அதிகாரிகள் அந்த பெண் ஆய்வாளருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு அங்குள்ளவருக்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…
பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…