தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் – டிடிவி தினகரன்
தூத்துக்குடி அருகே சிறையில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் டிடிவி தினகரன் கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளத்தை சேர்ந்தவர், ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ் .31 வயதான பென்னிக்ஸ் சொந்தமாக செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். போலீசார் விதிமுறைகளை மீறி கடை வைத்திருந்ததாக கூறி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் மர்மமுறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் என தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு என தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் தெரிவித்தார்.
இந்நிலையில் காவல்துறையினர் தாக்கியதால்தான் இருவரும் பலியாகியிருப்பதாக வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இதுகுறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வணிகர்களின் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலிறுத்தல்.
வணிகர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதுடன், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 23, 2020