தந்தை, மகன் கொலை… இறுதி கட்டத்தில் சாத்தான்குளம் வழக்கு – சிபிஐ

Published by
பாலா கலியமூர்த்தி

சாத்தான் குளம் தந்தை – மகன் படுகொலை வழக்கில் சிறையில் உள்ள ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனுவுக்கு சிபிஐ எதிர்ப்பு.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை, மகன் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தும், குற்றச்சாட்டப்பட்டவர்களை கைது செய்தும் காவல்துறை தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஜாமீன் மனுக்கு எதிர்ப்பு:

இந்த நிலையில், சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மதுரையில் கிளையில் சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது. கொலை வழக்கில் கைதாகி சிறையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

சிபிஐ வாதம்:

இந்த மனு மீதான விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீஸ் என்பதால் சாட்சிகளை கலைக்க பல வழிகளை கையாளுவார்கள், பல சாட்சிகள் காவல்துறை சார்ந்து இருப்பதால் மிரட்டப்பட்டு கலைக்கப்படுவார்கள், எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிஐ வாதம் முன்வைத்துள்ளது.

சிபிஐ புகார்:

மேலும் சிபிஐ கூறுகையில், இன்னும் 6 சாட்சியங்களை மட்டுமே விசாரணையை நடத்த வேண்டியுள்ளது. குற்றச்சாட்டப்பட்டவர்கள் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் செயல்படுகின்றனர். குறுக்கு விசாரணை என்ற பெயரில் 4 மாதங்களாக விசாரணையை தாமதமாக்கி வருவதாகவும் புகார் கூறியுள்ளது.

வழக்கு ஒத்திவைப்பு:

இதனால் ஒரு சாட்சியை விசாரிப்பதற்கு ஏறக்குறைய ஓன்றரை மாதம் அவதாகவும் சிபிஐ விளக்கமளித்துள்ளது. குற்றச்சாட்டப்பட்டவர்கள் போலீஸ் என்பதால் சாட்சியங்களை கலைக்க பல்வேறு வழிகள் உள்ளன. இதனால் குற்றச்சாட்டப்பட்டோருக்கு ஜாமீன் வழங்க கூடாது எனவும் கூறியுள்ளது. சிபிஐ வாதங்களை தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனுக்கு மீதான விசாரணையை ஏப்ரல் 24ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் கிளை.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுத்த ஹிஸ்புல்லா! 250 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல்!

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுத்த ஹிஸ்புல்லா! 250 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…

16 minutes ago

அதானி விவகாரம்., வயநாடு விவகாரம்., ஆரம்பிக்கும் முன்னரே ஆட்டத்துக்கு தயாரான எதிர்க்கட்சிகள்!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…

34 minutes ago

“கூட்டணிக்கு வர 100 கோடி கேக்குறான்” அதிமுக கூட்டத்தை கலாய்த்த உதயநிதி!

சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …

1 hour ago

ஐபிஎல் ஏலத்தில் ஷாக்கிங் டிவிஸ்ட்..! விற்கப்படாத 3 முக்கிய வீரர்கள்!

ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…

1 hour ago

இன்று இரண்டாம் நாள் ஐபிஎல் ஏலம்! கைவசமுள்ள இருப்புத் தொகை எவ்வளவு?

ஜெட்டா :  ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…

2 hours ago

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!

சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…

2 hours ago