சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கோவில்பட்டி அரசு மருத்துவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் தற்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ,உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோரை வருகின்ற 16-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது மதுரை முதன்மை நீதிமன்றம் .வருகின்ற 16-ஆம் தேதி மாலை 5 பேரையும் ஆஜர்படுத்தவும் உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம். சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 5 போலீசாரிடம் 2-வது நாளாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கோவில்பட்டி அரசு மருத்துவர் வெங்கடேஷ்-க்கு சிபிஐ அதிகாரிகள் அழைப்பு விடுத்தது சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயராஜ், பென்னிக்சுக்கு மருத்துவம் அளித்தவர் என்ற அடிப்படையில் மருத்துவர் வெங்கடேசிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது சிபிஐ
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…