தந்தை,மகன் கொலை வழக்கு – 3 போலீசாருக்கு நீதிமன்றம் காவல்
சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கில் 3 காவலர்களுக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட செல்லத்துரை, சாமத்துரை, வெயிலுமுத்து ஆகியோரிடம் விசாரணை நடத்த மதுரை நீதிமன்றம் சி.பி.ஐ.க்கு அனுமதி கொடுத்தது.
அதன்படி சி.பி.ஐ அதிகாரிகள் செல்லத்துரை, சாமத்துரை, வெயிலுமுத்து ஆகிய மூன்று பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியது.இந்நிலையில் 3 பெரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அப்பொழுது, 3 காவலர்களுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதன் பின் அவர்கள் மதுரை சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.