தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் சிறைக்கைதி, சிறை கண்காணிப்பாளர் உட்பட மேலும் 3 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கோவில்பட்டி கிளைசிறையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு, சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு, சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும், முக்கிய குற்றவாளிகளான எஸ்.ஐ. ரகு கணேஷ், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே கோவில்பட்டி அரசு மருத்துவர்கள் வெங்கடேஷ் மற்றும் வெண்ணிலாவை ஆஜராக சம்மன் அளித்துள்ளது. அதன்படி, மருத்துவர் வெண்ணிலா, மனித உரிமைகள் ஆணையர்கள் முன்பு ஆஜரானார்.
இதனையடுத்து, இந்த கொலை வழக்கில் கோவில்பட்டி சிறைக்கைதி ராஜா சிங், சிறை கண்காணிப்பாளர் சங்கர், மருத்துவர் வினிலா ஆகிய மூன்று பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கோவில்பட்டி சிறைக்கு ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் அழைத்து வந்தபோது அவர்களின் உடலில் காயங்கள் இருந்ததாக கைதி ராஜாசிங் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, பிரண்ட்ஸ் ஆப் போலீசும் ஜெயராஜ் மற்றும் பென்னிஸ்-ஐ அடித்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…