தந்தை, மகன் கொலை வழக்கு – அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ முடிவு

Published by
Venu

தந்தை, மகன் கொலை வழக்கில் அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில்  சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கு முன் தந்தை மகன் விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோர்   கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

எனவே கைதான போலீஸாரை காவலில் எடுக்க மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்தது நிலையில்  5 போலீசாரை நேற்று  வரை சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.அதன்படி சிபிஐ  போலீசாரிடம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில் இந்த வழக்கில் அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ  முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலில் எடுக்க வரும் திங்கள் கிழமை சிபிஐ மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.எஸ்.எஸ்.ஐ பால்துரை, காவலர்கள் தாமஸ், செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோரை காவலில் எடுக்க முடிவு செய்துள்ளது .மேலும் இந்த வழக்கு தொடர்பாக மீதமுள்ள புகைப்படங்கள், தடயங்கள் உள்ளிட்ட ஆவணங்களை சிபிஐயிடம், சிபிசிஐடி டி.எஸ்.பி. அனில்குமார் ஒப்படைக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

4 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

5 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

6 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

7 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

7 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

8 hours ago