தந்தை, மகன் கொலை வழக்கு – அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ முடிவு
தந்தை, மகன் கொலை வழக்கில் அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கு முன் தந்தை மகன் விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
எனவே கைதான போலீஸாரை காவலில் எடுக்க மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்தது நிலையில் 5 போலீசாரை நேற்று வரை சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.அதன்படி சிபிஐ போலீசாரிடம் விசாரணை நடத்தியது.
இந்நிலையில் இந்த வழக்கில் அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலில் எடுக்க வரும் திங்கள் கிழமை சிபிஐ மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.எஸ்.எஸ்.ஐ பால்துரை, காவலர்கள் தாமஸ், செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோரை காவலில் எடுக்க முடிவு செய்துள்ளது .மேலும் இந்த வழக்கு தொடர்பாக மீதமுள்ள புகைப்படங்கள், தடயங்கள் உள்ளிட்ட ஆவணங்களை சிபிஐயிடம், சிபிசிஐடி டி.எஸ்.பி. அனில்குமார் ஒப்படைக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.