தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக மேலும் 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சிறையில் உயிரிழந்தனர்.இது தொடர்பான வழக்கினை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து விசாரித்தது.அப்பொழுது தமிழக அரசு சார்பில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதற்கு நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று தெரிவிக்கப்பட்டது.இதனால் தமிழக அரசும் சிபிஐ விசாரணை குறித்து அறிவிப்பும் வெளியிட்டது.இதற்கு இடையில் நீதிமன்றம் சிபிஐ விசாரணை மேற்கொள்ளும் வரை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
பின் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. தந்தை -மகன் சிறையில் சித்தரவதை செய்யப்பட்டு இருவரும் கொலை செய்யப்பட்டதாக சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ்,தலைமை காவலர் முருகன் மற்றும் காவலர் முத்துராஜ் ஆகியோர் கைது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.பின்னர் இந்த வழக்கினை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது .
இந்நிலையில் சாத்தான்குளத்தில் தந்தை ,மகன் உயிரிழந்த விவகாரத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தியது சிபிசிஐடி.இந்த விசாரணைக்கு பிறகு 5 காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…