சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் பாரதிதாசன் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளார்.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவர் சிறையில் இருந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக விசாரணை நடத்தி வருகிறது.
நேற்று கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை நடத்தினார். நடைபெற்ற விசாரணையின் போது மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்ததாக தூத்துக்குடி ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன்,காவலர் மகாராஜன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டது.மேலும் இன்று ஆஜராகினர்.அப்பொழுது நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. மன அழுத்தம் காரணமாக மாஜிஸ்திரேட்டை போலீசார் அவமதிக்கும் விதத்தில் பேசிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சமயத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தாக்கல் செய்த அறிக்கையில், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய நேரடி சாட்சி தலைமைக் காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தியபோது, தந்தை – மகன் இருவரும் விடிய விடிய தாக்கப்பட்டதாகவும், இதனால் காவல்நிலையத்தில் உள்ள மேஜை மற்றும் லத்தியில் ரத்தக் கறை ஏற்பட்டதையும் தெரிவித்தார்.
இந்நிலையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மீண்டும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலர் ரேவதியிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…