தந்தை -மகன் உயிரிழப்பு ! கொலை வழக்காக பதிவு செய்தது சிபிஐ
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்தது சிபிஐ.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது. விசாரணையில் சிபிஐ விசாரணை நடத்தும் வரை இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதன்படி சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டது.
எனவே இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், பொருட்கள், சிசிடிவி காட்சிகள், உள்ளிட்டவையை சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையிலான சிபிஐ அதிகாரிகளிடம் சிபிசிஐடி ஒப்படைத்தது.இதனால் உயிரிழந்த தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வீடு ,பரிசோதனை செய்யப்பட்ட மருத்துவமனை என சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சாத்தான்குளம் விவகாரத்தில் சந்தேக மரணம் என பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளது சிபிஐ.ஏற்கனவே கைதான போலீஸாரை காவலில் எடுக்க மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,5 பேரையும் நாளை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.