#BREAKING: தந்தை, மகன் விவகாரம்.! போலீசார் மீது கொலை வழக்கு பதிவு.!

சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளதால் அவர்கள் விசாரணையை தொடங்கும் வரை இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதனால், இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 3 குழுக்களாக பிரிந்து சென்று இன்று காலை முதல் ஜெயராஜ் வீடு, கடை மற்றும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், சாத்தான்குளம் விவகாரத்தில் விசாரணைக்கு பிறகே காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவது பற்றி முடிவெடுக்கப்படும் என சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்த நிலையில், தற்போது சிபிசிஐடி தந்தை, மகன் இறந்த வழக்கை கொலை வழக்காக சி.பி.சி.ஐ.டி பதிவு செய்தது.