பிதாவே இவர்களை மன்னியும்..! – ஆளுநரின் கருத்து குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்..!
காந்தியடிகளை பாராட்டுகிறார்கள்! அவரை படுகொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சாவர்க்கரையும் பாராட்டுகிறார்கள் என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.
சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில், காந்தியடிகளின் 154 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காந்தியடிகளை நாம் மறந்து வருகிறோம். காந்தியை நாம் மறவாமல் அவர் நினைவை நாம் தொடர்ந்து போற்றிட வேண்டும். காந்தியை மறப்பது நம் பெற்றோரை மறப்பது போன்றது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காந்தியடிகளை பாராட்டுகிறார்கள்! அவரை படுகொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சாவர்க்கரையும் பாராட்டுகிறார்கள்! பிதாவே இவர்களை மன்னியும்; தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.
காந்தியடிகளை பாராட்டுகிறார்கள்! அவரை படுகொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சாவர்க்கரையும் பாராட்டுகிறார்கள்!
பிதாவே இவர்களை மன்னியும்; தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள். pic.twitter.com/bxD4DlWb3B
— Mano Thangaraj (@Manothangaraj) October 3, 2022