புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரையபட்டியை சார்ந்தவர் ஆறுமுகம்(75). இவரது மகன் ராஜாங்கம் (46).இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 5 மகள் ஒரு மகன் உள்ளனர் .
இவர்களில் 3 மகள்களுக்கு திருமணம் முடிந்து விட்டது.ராஜாங்கம் வார சந்தைகளில் காய்கறிகளை விற்று வருகிறார்.நீண்ட நாள்களாக ராஜாங்கம் வயிற்று வலியால் அவதிபட்டு வந்து உள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிக வயிற்று வலி காரணமாக ராஜாங்கத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிதனர்.ராஜாங்கத்தை மருத்துவமனையில் அனுமதித்த சில நேரத்திலே இறந்து உள்ளார்.
பின்னர் ராஜாங்கத்தின் உடல் அவரது சொந்த ஊரான அரையபட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. ராஜாங்கத்தின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.அப்போது ராஜாங்கத்தின் தந்தை ஆறுமுகமும் கதறி அழுதார்.அப்போது திடீரென ஆறுமுகத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்த மருத்துவரை அழைத்து வந்து ஆறுமுகத்தை பரிசோதனை செய்தனர்.மருத்துவ பரிசோதனையில் ஆறுமுகம் இறந்தகாக மருத்துவர் கூறினார்.ஒரே குடும்பத்தை சார்ந்த தந்தை ,மகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…