சிறையில் உயிரிழந்த தந்தை,மகன்..மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்.!
தூத்துக்குடி அருகே சிறையில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் என தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு என தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர், சிறைத்துறை ஏடிஜிபி 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளது.