தூத்துக்குடி அருகே சிறையில் உயிரிழந்த தந்தை மற்றும் மகன் !

Default Image

தூத்துக்குடி அருகே சிறையில்   தந்தை மற்றும் மகன்  உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளத்தை சேர்ந்தவர், ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ் (31) பென்னிக்ஸ்  செல்போன் கடை நடத்தி வருகிறார். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையை கடந்த 20-ம் தேதி ஜெயராஜ் திறந்து தொடர்பாக போலீஸ் அவரை எச்சரித்தனர்.

மேலும், இதனால் போலீசாருக்கும் ஜெயராஜ் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் தனது தந்தையிடம் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்த போலீசாரிடம் சென்று சமாதானம் பேசியுள்ளார், ஆனால் பிரச்சனை பெரிதாக சென்றது.

இந்நிலையில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவர் மீது போலீசார் விதிமுறைகளை மீறி கடை வைத்திருந்ததாக கூறி வழக்கு பதிவு செய்து பிறகு கைது செய்து, ஜெயராஜ் , பென்னிக்ஸ் இருவரையும் கடந்த 21-ம் தேதி கோவில்பட்டியில்  உள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைத்த பிறகு நேற்று இரவு பென்னிக்ஸிற்கு  உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடனடியாக கிழக்கு காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து, அடுத்ததாக பென்னிக்ஸ் தந்தையும் மருத்துமனையில் கடும் காய்ச்சல் என கூறி அவருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால், இவர்கள் இருவரின் கொலைக்கு காரணமானவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சாத்தான்குளத்தில் உள்ள பொதுமக்கள் அங்குள்ள காமராஜர் சில அருகில் அமர்ந்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில்,கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். இந்நிலையில் சிறையில் இருவர் உயிரிழந்தது தகவல் தொடர்பாக கோவில்பட்டி ஜெ.எம்1 நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்