தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்..தமிழகம் முழுவதும் நாளை மருந்து கடைகள் அடைப்பு.!

கோவில்பட்டி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை வணிகர் சங்க பேரமைப்பு நடத்தும் கடையடைப்பிற்கு ஆதரவு அளித்து மருந்து வணிகர்கள் சங்கம் அறிவிப்பு.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணைக்கு அழைத்து சென்ற தந்தை மற்றும் மகன் உயிரிழந்தனர்.இந்நிலையில், இந்த சம்பவம் காரணமாக, தமிழகத்தில் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகள் அடைப்பு என மருத்துவ வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வணிகர் சங்க பேரமைப்பு நடத்தும் கடையடைப்பிற்கு ஆதரவு அளித்து மருந்து வணிகர்கள் சங்கம் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. ஏற்கனவே நேற்று தமிழக முழுவதும் கடைகள் அடைப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாவது முறை நாளை கடைகள் அடைப்பு என மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!
April 11, 2025
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025