கிணற்றில் குதித்த 16வயது சிறுமி!உன் சாவுக்கு காரணம் நா தா..தந்தை தூக்கிட்டு தற்கொலை..!
கிணற்றில் குதித்து சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதனால் மனமுடைந்த, அந்த சிறுமியின் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் அரங்கேறியுள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி இவருடைய மகள் மகாலட்சுமி (16)வயது. 10 ஆம் வகுப்பு தேர்வில் மகாலட்சுமி தோல்வியடைந்து உள்ளார்.இதனால் மீண்டும் தேர்வு எழுதுவதற்காக பெரம்பலூரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்த நிலையில் மதுபோதையில் தந்தை பொன்னுசாமி மகாலட்சுமியை திட்டியதாகக் கூறப்படுகிறது. தந்தை தன்னை தீட்டியதில் மனமுடைந்த சிறுமி அதே கிராமத்தில் தனது உறவினரின் விவசாயக் கிணற்றில் குதித்து நேற்று மாலை தற்கொலை செய்துகொண்டார்.இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறந்து கிடந்த சிறுமியின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகள் உயிரிழந்த துக்கத்தால் மனமுடைந்த தந்தை பொன்னுசாமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது