வரும் 24-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் – வணிகர் சங்கம் அறிவிப்பு
10-ஆம் தேதி தமிழகம் தழுவிய அளவில் சட்டையில் பேட்ஜ் அணிந்து போராட்டம் என வணிகர் சங்கம் பேரமைப்பு அறிவிப்பு.
டெஸ்ட் பர்சேஸ் முறையை கைவிடக்கோரி வரும் 24-ஆம் தேதி உண்ணாவிரதம் நடைபெறும் என்று வணிகர் சங்கம் பேரமைப்பு அறிவித்துள்ளது. வரும் 10-ஆம் தேதி தமிழகம் தழுவிய அளவில் சட்டையில் பேட்ஜ் அணிந்து போராட்டம் நடைபெறும் எனவும் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். சில்லறை விற்பனைக் கடைகளில் டெஸ்ட் பர்சேஸ் முறையை கைவிடக் கோரி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், வரும் 24-ஆம் தேதி உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.