வேகமாக பரவும் கொரோனா ! டீன் ஆர்.ஜெயந்தி விடுமுறை பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது – கனிமொழி ட்வீட்
டீன் ஆர்.ஜெயந்தி விடுமுறை பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை மருத்துவக் கல்லூரி(எம்.எம்.சி) மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் ஆக பணியாற்றி வருபவர் ஆர்.ஜெயந்தி.கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது அவர் பணி விடுப்பில் சென்றுள்ளார்.எனவே சென்னை மருத்துவக் கல்லூரியின் ஹெபடாலஜி பிரிவு இயக்குனரும் பேராசிரியருமான நாராயணசாமி, அடுத்த உத்தரவு வரும் வரை ராஜாஜி மருத்துவமனையின் புதிய டீனாக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து திமுக எம்பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் வேளையில், கொரோனாவுக்கான சிகிச்சை வழங்குவதில் மிக முக்கிய பங்காற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி) மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் ஆர்.ஜெயந்தி அவர்கள் திடீரென விடுமுறையில் சென்றிருக்கிறார்.
அதற்கான காரணம் என்னவென்று தெளிவாகக் கூறப்படவில்லை. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் குழப்பம் நிலவிவரும் சூழலில், இந்த விடுமுறை பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது என்று தெரிவித்துள்ளார்.
#கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் வேளையில், கொரோனாவுக்கான சிகிச்சை வழங்குவதில் மிக முக்கிய பங்காற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி) மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் ஆர்.ஜெயந்தி அவர்கள் திடீரென விடுமுறையில் சென்றிருக்கிறார்.
1/2 #coronavirus pic.twitter.com/d5R4ozHyMG
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 14, 2020