திருமங்கலம்: விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாயில் தாலுகா அளவில் நடைபெறுகிறது. அதன்படி திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் முகாமிற்கு மண்டல துணை வட்டாட்சியர் அழகர்சாமி தலைமை வகித்தார். வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள், ‘‘சிப்காட் அமைவதாக கூறிய சிவரக்கோட்டை பகுதியில் அதிகாரிகள் சிலர் இடம் வாங்கியுள்ளனர். இதனால் விவசாயிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் சிப்காட் திட்டத்தினை கொண்டு வருவார்களோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. சிப்காட்டிற்கு வைகை அணையில் இருந்து 40 லட்சம் தண்ணீர் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இதனால் மதுரை, தேனி மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கும். எனவே இதனை தடுக்க வேண்டும். திருமங்கலம் தாலுகா வனப்பகுதியில் மான், முயல், காட்டுப்பன்றி வேட்டை அதிகரித்துள்ளது. வனத்துறையினர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட மனுக்களை அளித்தனர்.
முன்னதாக கூட்டத்தில் சிவரக்கோட்டை, நேசனேரி, ஆலம்பட்டி, சாமிமல்லம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து தலா 1 விவசாயி வீதம் 4 விவசாயிகள் மட்டுமே கலந்து கொண்டனர். இதற்கு போதிய முன்னறிவிப்பு இல்லாததே காரணம் என கூறப்படுகிறது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…