முன்னறிவிப்பு இல்லாமல் நடந்த விவசாயிகள் குறை தீர்ப்பு முகாம்..,

Default Image

திருமங்கலம்: விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம்  ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாயில் தாலுகா அளவில்  நடைபெறுகிறது. அதன்படி திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் முகாமிற்கு மண்டல துணை வட்டாட்சியர் அழகர்சாமி தலைமை வகித்தார். வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள், ‘‘சிப்காட் அமைவதாக கூறிய சிவரக்கோட்டை பகுதியில் அதிகாரிகள் சிலர் இடம் வாங்கியுள்ளனர். இதனால் விவசாயிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் சிப்காட் திட்டத்தினை கொண்டு வருவார்களோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. சிப்காட்டிற்கு வைகை அணையில் இருந்து 40 லட்சம் தண்ணீர் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இதனால் மதுரை, தேனி மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கும். எனவே இதனை தடுக்க வேண்டும். திருமங்கலம் தாலுகா வனப்பகுதியில் மான், முயல், காட்டுப்பன்றி வேட்டை அதிகரித்துள்ளது. வனத்துறையினர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட மனுக்களை அளித்தனர்.

முன்னதாக கூட்டத்தில் சிவரக்கோட்டை, நேசனேரி, ஆலம்பட்டி, சாமிமல்லம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து தலா 1 விவசாயி வீதம் 4 விவசாயிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.  இதற்கு போதிய முன்னறிவிப்பு இல்லாததே காரணம் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்