“புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை”- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்!

புதிய வேளாண்சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லையெனவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் மட்டுமே போராடுகின்றனர் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த மறைமலை நகரில் நடைபெறும் கூட்டத்தில் சுற்றுசூழல் மற்றும் தகவல் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் வேளாண் சட்டங்களில் இருக்கும் நன்மைகள் குறித்து அவர் விளக்கமளித்தார். அதுகுறித்து பேசிய அவர், தாங்கள் விளைவித்த பொருட்களுக்கு விலையை நிர்ணயிக்க முடியாத நிலையில் விவசாயிகள் இருந்ததாகவும், தமிழகம், கர்நாடகா, குஜராத் உட்பட பல மாநிலங்களில் விவசாயிகள் போராடவில்லை என கூறினார்.
மேலும் பேசிய அவர், புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டாலும் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் எனவும் இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநில விவசாயிகள் மட்டுமே போராடுவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், வேளாண் சட்டங்கள் மூலம் அதிக பலன்பெறுவது பஞ்சாப் மாநில விவசாயிகளே எனவும் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட கலந்துகொண்டார்.
அதுமட்டுமின்றி, இந்த கூட்டத்தில் மத்திய அரசு PM Kisan என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்த திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு ரூ.6,000 அதாவது, 4 மாதத்திற்கு ஒரு முறை ரூ.2,500 வழங்கப்படும். இந்த திட்டம் மூலம் நாடு முழுவதும் இருக்கும் 9,000 கோடி விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ருபாய் வழங்கப்படும் என்றும், அந்த தொகை வந்துவிட்டால் பயனர்களின் மொபைல் எண்ணிற்கு குறுந்செய்தி ஒன்று வரும் எனவும், இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025