மேகேதாட்டுவில் அணை கட்டக்கூடாது என வழக்கு: தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி…!!
மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ள விவசாயிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு முதலமைச்சர் பழனிசாமி சென்னை புறப்பட்டார். அப்போது விமான நிலையத்தில் அவரை சந்தித்த விவசாயிகள், கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டக்கூடாது என தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளதற்கு நன்றி தெரிவித்தனர்.முக்கொம்பு அணையை விரைவாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.