வரலாறு காணாத மழையால் பரிதவிக்கும் விவசாயிகள்! – மநீம
விவசாயிகளுக்கு மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க விரைந்து நடவடிக்கை வேண்டும் என மநீம வலியுறுத்தல்.
விவசாயிகள் வரலாறு காணாத மழையால் பரிதவித்து வரும் நிலையில், சேதங்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க விரைந்த நடவடிக்கை வேண்டும் என்று மநீம வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்.
பேரிடர் தடுப்புப் பணிகளில் சிறிய அலட்சியம்கூட, பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, தமிழக அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளை விரைவுபடுத்தி, மழையால் மக்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில், தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத மழையால் பரிதவிக்கும் விவசாயிகள்!
சேதங்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க விரைந்த நடவடிக்கை வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.
விவசாய அணி மாநில செயலாளர் Dr.G.மயில்சாமி அறிக்கை.@CMOTamilnadu @mkstalin @MRKPanneer @KKSSRR_DMK @SMeyyanathan pic.twitter.com/Q3GYtTPEBX— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) November 14, 2022