டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு: மதுரையில் கட்டுக்கடங்கா கூட்டம்.. விவசாயிகள் நடத்திய பேரணி நிறைவு!
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக 16 கி.மீ. தொலைவிற்கு விவசாயிகள் நடத்திய பேரணி நிறைவு பெற்றள்ளது.
மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி, நரசிங்கம்பட்டியிலிருந்து மதுரை தபால் நிலையம் வரையில் முல்லை பெரியார் ஒருபோக பாசன விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், வணிகர்கள் சங்கம் மற்றும் 40 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சார்பில் பேரணி எழுச்சியோடு நடைபெற்றது.
மேலும், மேலூரில் இருந்து தமுக்கம் அருகே அமைந்துள்ள மத்திய அரசின் தலைமை தமிழ் தபால் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இதனால் தல்லாகுளம் வழியாக தமுக்கம், கோரிப்பாளையம் செல்லும் சாலையில் சாலை முழுவதும் வாகனம் அணிவகுத்து நின்றதால், நான்கு வழிச்சாலை ஸ்தம்பித்து போனது.
இதனிடையே, பேரணி செல்லும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு கிராம மக்கள் உணவு, குளிர்பானங்களை வழங்கினர். அனைத்து விவசாய சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த பேரணி மதுரை தமுக்கம் வாசல் வரை வந்தது. தடையை மீறி பேரணியாக சென்ற விவசாயிகளை தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
#WATCH | Madurai, Tamil Nadu: Drone visuals of people from 40 villages, including Melur, protesting against the Tungsten mining project
The villagers argue that the project will severely impact their lives and cause significant environmental damage. Through this protest, they… pic.twitter.com/xFIkIZ99eL
— ANI (@ANI) January 7, 2025
முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரிடம் மதுரை, தேனி மாவட்ட எஸ்.பி.க்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றினர். இருப்பினும், பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் நடத்திய டெல்லி சலோ பேரணி போல மதுரையிலும் சுஜிமார் 16 கி.மீ. தொலைவிற்கு விவசாயிகள் நடத்திய பேரணி தற்போது நிறைவு பெற்றது.