விவசாயிகள் எழும்பூர் ரயில் நிலையத்தில் போராட்டம் : மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் ஆதரவு….!!!
எழும்பூர் ரயில் நிலையத்தில் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் ஆதரவு தெரிவித்தார்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அந்த போராட்டத்தில் மக்கள் நீதி மாயம் கட்சி தலைவர் கமலஹாசன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை சந்தித்து பேசினார். இதனையடுத்து விவாசாயிகள் தங்களை சந்திக்க வந்த கமலஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமலஹாசன் கூறியதாவது, விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு நியாயமான விலை வழங்குமாறு தான் போராடி வருகின்றனர். இந்த கோரிக்கையை அரசால் நிறைவேற்றமுடியும் என கூறியுள்ளார்.