விவசாயிகளே! பயிர் காப்பீடு, நெல் கொள்முதல், கரும்பு சாகுபடி… பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு அரசின் 2024-2025ஆம் ஆண்டிற்கான வேளாண்துறைக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அதில், பல்வேறு அறிவிப்புகள், விவசாயிகளுக்கு மானியம், நிவாரணம் மற்றும் ஊக்கத்தொகை, பயிர் காப்பீடு உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2023-2024 அரவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும். கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடியும், சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க ரூ.12.40 கோடியும் ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டது.
2024-25 தமிழக வேளாண் பட்ஜெட்… அரசின் முக்கிய அறிவிப்புகள்.!
இதுபோன்று, தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் படெக்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டபட்டது. அதில், பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்களை பாதுகாக்க 200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ.50 லட்சம் நிதி ஒதுக்குவதாக அமைச்சர் குறிப்பிட்டார். அதேபோல், ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
மேலும், பேரவையில் அமைச்சர் எம்ஆர்கே கூறியதாவது, 2024-2025 ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ”ஒரு கிராமம் ஒரு பயிர்” திட்டத்தை 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். அதுபோன்று, கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க ரூ.16,500 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்ட்டுள்ளதாகவும், பயிர்க்கடன் வட்டி மானியத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் கூறினார்.