திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி சேர்ந்தவர் சங்கர் (50) .இவரது மனைவி பானுமதி (40) .இவர்களுக்கு தீபா என்ற மகளும், சதீஷ்குமார், சூர்யா என்ற 2 மகன்களும் உள்ளனர்.
விவசாயி சங்கர் சிறுவயது இருந்து பிரதமர் நரேந்திரமோடியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். இதனால் பிரதமர் மோடிக்கு தனது சொந்த நிலத்தில் கோவில் கட்டிசிலை வைத்து வழிபட வேண்டும் என விரும்பி உள்ளார்.
இதை தொடர்ந்து சங்கர் தனது தோட்டத்தில் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டி சிலைக்கு தினமும் பாலாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டி வழிபட்டு வருகிறார். இது குறித்து சங்கர் கூறுகையில் ,பிரதமர் மோடிக்கு யாருடைய உதவியும் இன்றி எனது சொந்த செலவில் கோவில் கட்ட விரும்பினேன்.
விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததல் கோவில் கட்ட முடியவில்லை. தற்போது, விவசாயத்தில் கிடைத்த பணத்தை வைத்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கி தற்போது கோவில் கட்டி முடித்துவிட்டேன். கட்சியின் மூத்த தலைவர்களை கொண்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம் என கூறினார்.
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…