கருப்பு கேரட்டை பயிரிடும் விவசாயி…! ஆர்வத்துடன் பார்த்து செல்லும் விவசாயிகள்…!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியைச் சேர்ந்த ஆசீர் என்ற விவசாயி கருப்பு நிற கேரட்டை பயிரிடுகிறார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசீர் என்ற விவசாயி. இவர் மலைக்காய்கறிகளை விவசாயம் செய்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் கருப்பு நிறத்தில் விளையக்கூடிய கேரட் விதைகளை விலைக்கு வாங்கி தனது நிலத்தில் பயிரிட்டுள்ளார்.
பொதுவாகவே கேரட் என்றாலே ஆரஞ்சு நிறத்தில் தான் காணப்படும். ஆனால் இந்த கேரட் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. இந்த கேரட் 90 நாட்களில் பயிரிட்டு அறுவடை செய்துவிடலாம். இந்த கேரட்டின் பூர்வீகம் சீனா. இந்த கேரட்டின் தன்மை இனிப்புடன் சிறிது காரம் கலந்த சுவையுடன் காணப்படுகிறது.
இந்த கேரட்டில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த கேரட் ஒரு சிறந்த உணவாகும். மேலும் இந்த கேரட் மற்ற கேரட்டை விட அதிக சுவை கொண்டது. இந்த கேரட்டில் அதிகம் செரிவூட்டப்பட்ட அந்தோசியனின் என்ற நிறமிதான் இருப்பதால்தான் இது கருப்பு நிறமாக காணப்படுவதாக கூறப்படுகிறது.