“தேக்கி கிடக்கும் நெல்மூட்டைகள் “தயக்கம் காட்டும் அதிகாரிகள் “வேதனை உச்சத்தில் விவசாயிகள்”..!!
நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்மூட்டைகள் தேக்கம் காரணமாக கொள்முதல் பணிகள் முறையாக நடைபெறவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. இம்மாவட்டத்தில் உள்ள 121 நேரடி கொள்முதல் நிலையங்களில், 4 ஆயிரம் மூட்டை வரை விவசாயிகள் நெல்லை கொடு வருகின்றனர்.
வரத்து அதிகமாக உள்ள நிலையில், 800 மூட்டை நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் அறுவடை செய்த நெல்லை சேமித்து வைக்க இடமின்றி வெட்டவெளியில் கொட்டி வைத்துள்ளனர்.
கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகள் லாரிகள் மூலம் வெளிமாவட்டங்களுக்கு அரவைப் பணிகளுக்கு அனுப்பப்படும். இந்த பணிகள் சரிவர நடைபெறாததால், ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
நெல்மூட்டைகள் நனைந்து சேதமடைவதால், உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
DINASUVADU