ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகத்திற்கு ரூ. 309.37 கோடியை விடுவிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது .
கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால், டெல்டா மாவட்டங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.ஆனால் அதேபோல் தற்போது ஃபானி என்ற புயல் உருவாகியுள்ளது.
சென்னைக்கு தென்கிழக்கே 730 கிலோ மீட்டர் தொலைவில் மையம்கொண்டுள்ள பானி புயல் இன்று தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகத்திற்கு ரூ. 309.37 கோடியை விடுவிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல் ஆந்திரா (200.25 கோடி), ஒடிசா (340.875 கோடி), மேற்கு வங்கம் (235.50 கோடி) ஆகிய மாநிலங்களுக்கும் புயல் முன்னெச்சரிக்கை நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் கஜா புயலால் பாதிக்கப்பட்டபோது பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் கஜா புயல் பாதிப்புக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ரூ.15 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.ஆனால் முழுமையாக மத்திய அரசு நிதி வழங்கவில்லை.ஆனால் ஃபானி புயலால் தமிழகத்திற்கு பாதிப்புகள் இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தமிழகத்திற்கு ரூ. 309.37 கோடியை உள்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது .
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…