நாளை ஃபானி புயல் அதி தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் !தமிழகத்திற்கு நேரடி பாதிப்பு உண்டா ?வானிலை ஆய்வு மையம் விளக்கம்
நாளை ஃபானி புயல் அதி தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், நாளை ஃபானி புயல் அதி தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.வடமேற்கு திசையில் நகர்ந்து 30ம் தேதி வடதமிழகத்தின் தெற்கு ஆந்திரா கடற்பகுதியில் 300 கிமீ தொலைவில் நகரும்.ஃபானி புயல் தமிழகத்தில் கரையை கடப்பதற்கான வாய்ப்பு இல்லை.இதனால் தமிழகத்திற்கு எந்த நேரடி பாதிப்பும் இல்லை
மீனவர்கள் இன்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.