திருச்சியில் பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை..!

shooting

திருச்சியில் 11 வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் (30) என்கவுண்டரில் சுட்டுக்கொலை  செய்யப்பட்டுள்ளார். சனமங்கலம் பகுதியில் ஜெகனை பிடிக்க முயன்றபோது எஸ்.ஐ. மீது தாக்குதல் நடத்தி தப்ப முயன்றுள்ளார். இதனையடுத்து, போலீசார் அவர் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். 

திருச்சிமாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி கொம்பன் ஜெகன். இவர் மீது 26 மாவட்டங்களில், 11 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், ஜெகனை பிடிப்பதற்காக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

ஆளுநர் அனுமதி மறுக்கும் மர்மம் என்ன? பின்னணியில் பாஜக மாநில தலைவரா? ஜோதிமணி எம்.பி கேள்வி!

இந்த தனிப்படை போலீசார் ரவுடி ஜெகனை தேடி வந்தனர். இதனையடுத்து, ரவுடி ஜெகன் சனமங்கலம் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், ஜெகனை பிடிப்பதற்காக போலீசார் சென்றுள்ளனர்.

போலீசார் சனமங்கலம் பகுதியை அடைந்த போது, போலீசாரை பார்த்தவுடன் அவர் தப்ப முயன்றுள்ளார். அவரை விரட்டி பிடிக்க முயன்ற போது, உதவி ஆய்வாளர் வினோத்தை ஜெகன் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ரவுடி ஜெகன் மீது போலீசார் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ரவுடி ஜெகன் மீது 2 இடங்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஜெகனின் உடல் தற்போது லால்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்