தனிப்படை போலீசாரால் நள்ளிரவில் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சிடி மணி தனிப்படை உதவி ஆய்வாளரை காலில் சுட்டுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி தான் சிடி மணி. இவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சில வழக்குகளுக்காக இவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறை தண்டனையும் பெற்றுள்ளார். இந்நிலையில் புழல் சிறையில் இருந்து அண்மையில் ஜாமினில் வெளிவந்த சிடி மணி தலைமறைவாகி விட்டதாக போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்துள்ளனர்.
இதனையடுத்து சென்னை அடுத்த நாவலூரில் பதுங்கியிருந்த சிடி மணியை இன்று நள்ளிரவு போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்த வருகின்றனர். அப்பொழுது சிடி மணியை பிடிக்க சென்ற தனிப்படை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனை சிடி மணி காலில் சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த உதவி ஆய்வாளர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தின் போது சிடி மணியும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது, தற்பொழுது இது குறித்து சிடி மணியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…