ஆண்மைக் குறைவு மற்றும் நரம்பு தளர்ச்சி ஆகிய சித்த மருத்துவத்தில் பிரபலமான டாக்டர் சிவராஜ் சிவகுமார் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று நள்ளிரவு 12 .5 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கக் கூடிய சித்த வைத்திய நிபுணர் ஆக விளங்கியவர் தான் டாக்டர் சிவராஜ் சிவகுமார். சேலத்தை தலைமை இடமாக கொண்டு இந்தியாவில் ஏழு தலைமுறைகளாக 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வருகின்ற குடும்பம்தான் சிவராஜ் சித்த வைத்தியரின் குடும்பம். சித்த வைத்தியர் சிவராஜும் ஆண்மை குறைவு மற்றும் நரம்பு தளர்ச்சி காண பல்வேறு சித்த மருத்துவங்களை வழங்கி புகழ் பெற்ற மருத்துவராக விளங்கி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் சிகிச்சை பலனின்றி இன்று நள்ளிரவு 12 மணியளவில் உயிரிழந்துள்ளார். இவரது உடல் சேலம் சிவதாபுரத்தில் உள்ள அவரின் பூர்வீக இடம் ஆகிய வீரான அகஸ்தியர் மாளிகையில் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சித்த வைத்திய நிபுணர் சிவகுமாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது நல்லடக்கம் இன்று மாலை நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…
சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை…
மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி, நரசிங்கம்பட்டியிலிருந்து மதுரை தபால் நிலையம் வரையில் முல்லை பெரியார் ஒருபோக பாசன…
ரவை பலரும் வெறுக்கும் உணவாக இருந்தாலும் அது ஒரு சிறந்த சிற்றுண்டி எனலாம் . அதன் ஆரோக்கிய நன்மைகளை இந்த…
டோக்கியோ: திபெத், நேபாளத்தை தொடர்ந்து, ஜப்பானிலும் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு ஜப்பானில் உள்ள டோரிஷிமா தீவுப்…