குடும்ப பிரச்சனை ..! தந்தையை கொலை செய்து புதைக்க முயன்ற மகன்.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சின்னக்கள்ளிபட்டி கிராமத்தை சார்ந்தவர் மாகாளி (60). இவரது மனைவி பூவாள் இரண்டு வருடத்திற்கு முன் இறந்து உள்ளார்.இதனால் மாகாளி தனியாக வசித்து வருகிறார்.இவருக்கு சிவராஜ் என்ற மகன் உள்ளார்.
சிவராஜ் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார்.தந்தை மாகாளிக்கும் , சிவராஜிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று இரவு குடித்து விட்டு தனது தந்தை வீட்டிற்கு சென்ற சிவராஜ் மாகாளி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.
அப்போது கோபமடைந்த சிவராஜ் தந்தை மாகாளியை அடித்து கொலை செய்து உள்ளார். இதனால் தந்தை உடலை மறைக்க வீட்டில் குழி தோண்டி புதைக்க சிவராஜ் குழி பறித்து உள்ளார்.அருகில் இருந்தவர்கள் மாகாளி வீட்டில் இருந்து ஏதோ சத்தம் கேட்டதால் அவர்கள் அங்கு வந்து உள்ளனர்.
அவர்கள் வந்ததும் சிவராஜ் தப்பி ஓடிவிட்டார்.பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் மாகாளி உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பி ஒட்டிய சிவராஜை போலீசார் கைது செய்தனர்.குடும்ப பிரச்சனையால் தந்தையை மகன் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.