குடும்ப அரசியலால் தான் அதிமுகவில் பிரச்சனை- தம்பிதுரை எம்.பி.
அதிமுகவில் பிரச்சனை காரணம் குடும்ப அரசியல் தான் என தம்பிதுரை எம்.பி. பேச்சு.
குடும்ப அரசியல் காரணமாகதான் அதிமுகவில் பிரச்சனை ஏற்பட்டது என அதிமுக எம்பி தம்பிதுரை கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் குடும்ப அரசியல், ஊழலுக்கு எதிராக அதிமுக பிரச்சாரம் மேற்கொள்ளும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் 10 ஆண்டுக்கு முன்பு நீக்கப்பட்டோர் அவரது புகைப்படத்தை வைத்து நாடகமாடுகின்றனர். ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்களால் அதிமுக ஒன்றிணையும் என்று எப்படி கூற முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.