குடும்ப ஓய்வூதியம்…இதனை மட்டும் சமர்பித்தால் போதும் – அரசு முக்கிய அறிவிப்பு!

Default Image

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பணி ஓய்வூதியத்தை (Service Pension) குடும்ப ஓய்வூதியமாக (Family Pension) மாற்றம் செய்வதில் அதிக காலதாமதமும் நடைமுறை சிக்கல்கள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்,குடும்ப ஓய்வூதியம் கோரும் நேர்வுகளில் கணவன் மற்றும் மனைவி இறப்பு சான்றிதழ் மட்டுமே சமர்ப்பித்தால் போதும் என்று தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் முருகானந்தம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக,அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:”இனிவரும் காலங்களில் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு,ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தளத்தில் (IFHRMS) கணவன் அல்லது மனைவியின் அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும்.எனவே,குடும்ப ஓய்வூதியம் கோரும் நேர்வுகளில் அவர்கள் கணவன் அல்லது மனைவியின் இறப்புச் சான்றிதழ் மட்டும் சமர்ப்பித்தால் போதுமானதாகும்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்