மீனவர்கள் 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி ! முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

Default Image

மீன்பிடிக்கும்போது கடலில் தவறி விழுந்து உயிரிழந்த ராமேஸ்வரம், கன்னியாகுமாரி மீனவர்கள் 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,மீன் பிடி பணியில் ஈடுபட்டிருந்தபோது ,படகு கவிழ்ந்து உயிரிழந்த செல்வமணி,கோவிந்தராஜ் ,சிந்தாஸ்,மினோன்,சகாயம்,லூர்துராஜ்,அருளிஸ் ஆகிய 7 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கண்ட  சம்பவங்களில் உயிரிழந்த 7 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க நான் உத்தரவு பிறப்பித்துள்ளேன்.இவ்வாறு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.இந்த மீனவர்கள் 7 பெரும்  நாகப்பட்டினம், ராமேஸ்வரம், கன்னியாகுமாரி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்