டிக்டாக்கால் சீர்குலைந்த குடும்பம்.! மனைவி மற்றும் மகள் பிரிந்த சோகத்தில் விபரீத முடிவு எடுத்த கணவர்.!
மனைவி மற்றும் மகள் இருவரும் டிக்டாக் மூலம் பழக்கமானவர்களுடன் இறங்கி போனதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிக்டாக் செயலியால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் வந்துள்ளது. சமீபத்தில் அந்த செயலியை முடக்கியதை அடுத்து பலர் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். மேலும் இந்த டிக்டாக் செயலியால் பல குடும்பங்களின் வாழ்க்கை சீரழிந்துள்ளது. அந்த வகையில் டிக்டாக்கால் ஒர்ஷாப் உரிமையாளர் ஒருவர் வீடியோ மூலம் மரண வாக்குமூலம் கூறிவிட்டு தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் உள்ள பொம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த ஜி. என். பாலன்நகரை சேர்ந்தவர் ரவி(44).இவரது மனைவியான கனகவள்ளிக்கும்(35), ரவிக்கும் 16வயதில் ஒரு மகள் மற்றும் 15வயதில் ஒரு மகனும் உள்ளனர். திருப்பூரில் ஒர்க்ஷாப் நடத்தி வரும் ரவியின் வாழ்க்கை டிக்டாக் என்ற ஆப் மூலம் சீர்குலைந்துள்ளது. ஆம் ரவியின் மனைவி மற்றும் மகள் டிக்டாக்கில் மூழ்கி போனது மட்டுமில்லாமல் டிக்டாக் மூலம் ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த நபருடன் கனகவள்ளி அறிமுகமாகி அது கள்ளதொடர்பாக மாறியுள்ளது. அதே போன்று ரவியின் மகளும் டிக்டாக்கில் ஒருவரை காதலித்துள்ளார் வந்துள்ளார். இதனையறிந்த ரவி இருவரையும் கண்டிக்க, அவர்கள் கேட்ட பாடில்லை.
இதனையடுத்து கடந்த 3ம் தேதி ரவியின் மனைவி மற்றும் மகள் வீட்டை விட்டு சென்று விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். உடனடியாக அனுப்பர்பாளையம் காவல்நிலையத்தில் ரவி புகாரளிக்க, போலீசாரும் கனகவள்ளியிடம் ரவியுடன் சேர்ந்து வாழ அறிவுறுத்த கனகவள்ளி அதனை மறுத்ததுடன் ரவியை தரக்குறைவாகவும், கேவலமாகவும் பேசியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரவி வீட்டில் சென்று தனது மரண வாக்குமூலத்தை வீடியோ மூலம் கூறி விட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி விட்டு தூக்கில் தொடங்கியுள்ளார். அவரது மரணத்திற்கு காரணம் என்று கூறிய சூரம்பட்டியை சேர்ந்த 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிக்டாக்கால் ஒரு அழகான குடும்ப சீரழிந்தது மட்டுமில்லாமல் ஒரு உயிரையும் பறித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.