இந்திய குடிமகன் அல்லாதவருக்கு குடும்ப அட்டை வழங்கக்கூடாது- உணவுப்பொருள் வழங்கல் துறை.!
ஒரே நபர் இரண்டு குடும்ப அட்டையை பயன்படுத்துவது தொடர்பாக விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரே நபர் தமிழகம் மற்றும் பிற மாநில குடும்ப அட்டையையும் வைத்துக்கொண்டு ரேஷன் பொருட்களை வாங்குவது தொடர்பாக, தமிழக அரசு அதனை விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இலவச பொருட்களான வேட்டி மற்றும் சேலைகளை ரேஷன் கடைகளில் இருப்பு வைத்துக்கொள்ளாமல் உடனடியாக வழங்க உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
மேலும் இந்திய குடிமகன் அல்லாதோருக்கு புதிய குடும்ப அட்டை வழங்கக்கூடாது என்று உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் கடைகள் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டு பொருட்கள் வழங்கப்படுவதை குறிப்பிட்ட அலுவலர்கள் உறுதி செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.