“பொய் விளம்பரம்;சட்டம் ஒழுங்கு கெட்ட திமுக ஆட்சி” – ஈபிஎஸ் ஆவேசம்!

Published by
Edison

திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு,தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், துளி போன்ற இந்த ஓராண்டு காலத்தில் கடல் போன்ற சாதனைகளை செய்துள்ளோம் என்ற பெருமிதத்துடன் தான் மாமன்றத்தில் நின்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர், 5 முக்கிய திட்டங்களை அறிவித்தார்.அதன்படி,

  1. அரசு பள்ளியில் (1 முதல் 5) மாணவர்களுக்கு காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக சில மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், தொலைதூர கிராமங்களிலும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது,படிப்படியாக திட்டம் விரிவுபடுத்தப்படும்.
  2. ஊட்டச்சத்து குறைபாட்டை களைய 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
  3. டெல்லியைப் போன்று தமிழகம் முழுவதும் தகைசால் பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கப்படும்.ரூ150 கோடியில் அரசு மற்றும் மாநகராட்சியைச் சேர்ந்த 25 பள்ளிகள் மேம்படுத்தப்படும்.
  4. கிராமப்புறங்களைப் போல்,நகர்ப்புறங்களில் மருத்துவ நிலையங்களை அமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  5. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டமானது அறிமுகப்படுத்தப்படும். நிறைவேற்றப்படாத அடிப்படைத் தேவைகள் அந்தந்த எம்எல்ஏக்கள் பரித்துரையின் அடிப்படையில் பரிசீலனைக்கு ஏற்கப்படும் என தெரிவித்தார்.

இதனையடுத்து,முதல்வரின் உரையை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில்,திமுக அரசின் ஓராண்டு சாதனை என்பது பொய்யான விளம்பரம் என்றும் அதிமுகவின் திட்டங்களை தான் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார் எனவும் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு போய்விட்டது என்றும் எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக,செய்தியாளர் சந்திப்பில் ஈபிஎஸ் கூறியதாவது:

“திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஒரு பொய்யான விளம்பரத்தை முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.திமுக ஆட்சி அமைத்த இந்த ஓராண்டு காலத்தில் சட்டம் ஒழுங்க முழுமையாக கெட்டு விட்டது.

அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் முடிவுற்ற நிலையில் அந்த முடிவுற்ற பணியைத்தான் முதல்வர் இன்று திறப்பு விழாவாக காண்கிறார்.மேலும்,அம்மா அரசு கொண்டு வந்த திட்டத்திற்கு தான் முதல்வர் அடிக்கல் நாட்டிக் கொண்டிருக்கிறார்.

இந்த ஓராண்டுகால திமுக ஆட்சியில் எந்தவொரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை,நடைமுறைபடுத்தப்படவில்லை.ஆனால்,அம்மா ஆட்சியில் இருந்த போதும்,மறைந்த போதும் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.இதனால் அதிக அளவில் மக்களும் பயன் பெற்றார்கள்”,என்று தெரிவித்தார்.

Recent Posts

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! 

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

1 hour ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

3 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

4 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

4 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

5 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

5 hours ago