குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற போலி சாமியார் கைது.!

Default Image

நெல்லை மாவட்டம் கடையமான் குளத்தில் வசித்து வந்தவர் 70 வயது மூதாட்டி பார்வதி, மேலும் டோன்வூரை சேர்ந்தவர் சாமியார் ராஜன், இந்நிலையில் ராஜன் பார்வதியிடம் உங்கள் வீட்டில் கோடிக் கணக்கான தங்க புதையல்கள் உள்ளது, அந்த புதையலை எடுக்க வேண்டும் என்றால் சில பூஜைகள் செய்யவேண்டும் என்று பார்வதியிடம் சாமியார் ராஜன் ஆசையை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் ராஜன் தங்க புதையலை எடுக்க கிட்ட தட்ட 2 லட்சம் பணம் வங்கியுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் தங்க புதயலை எடுப்பதற்காக நேற்று இரவு பூஜைக்காக கருப்பு பூனை, மற்றும் கோழி பலி கொடுக்க வேண்டும் என்று பார்வதியின் மகன் குமரேஷன் என்பவரிடம் கூறியுள்ளார்.

மேலும் தங்க புதையலுக்கு ஆசைப்பட்டு சாமியார் ராஜன் பேச்சை கேட்டு கருப்பு பூனை மற்றும் கோழியை குமரேஷன் கொடுவந்து சாமியார் ராஜனிடம் ஒப்படைத்துள்ளார், மேலும் பூஜை தொடங்கியதும் அங்கிருந்த கருப்பு பூனை மற்றும் கோழி இரன்டும் தப்பி சென்றுவிட்டது.

இந்நிலையில் இதனால் சாமியார் ராஜன் இதற்கு பதிலாக உனது மூத்தமகன் அல்லது இளைய மகன் இருவரில் யாரையாவது நரபலி கொடுத்துவிடு, அப்போதுதான் அந்த புதையல் கிடைக்கும் என்று கூறியுள்ளார், அப்பொழுது குமரேஷன் மது போதையில் இருந்துள்ளார்.

மேலும் இதனால் பதற்றமடைந்த குமரேஷன் மனைவி எனது குழந்தைகளை நரபலி கொடுக்க அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார், உடனடியாக சாமியார் குழந்தையை பிடித்து இழுத்துள்ளார், இதனால் குமரேஷன் மனைவி வேகமாக குழந்தையை தூக்கிக்கொண்டு அக்கம் பக்கத்தினருக்கு குரல் கொடுத்துள்ளார்.

அவர் குரல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு இந்த தகவலை கூறினார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போலி சாமியார் ராஜனை கைது செய்தனர். மேலும் பார்வதி குமரேஷன் ஆகிய இரண்டு பேரிடமும் விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்