அண்ணா பல்கலைக்கழகத்தின் விடைத்தாள் பணியில் ஈடுபட்ட பேராசிரியர்களுக்கு TDS எனப்படும் வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை முறையாக செலுத்தவில்லை எனக் கூறி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் சிலரின் பிஎச்டி சான்றிதழ்களை, அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வுசெய்தபோது, போலி என கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும், அண்ணா பல்கலைக்கழக பதிவாளா் கருணாமூர்த்தி அறிக்கை ஒன்றை அனுப்பினார்.
அதில், 2020-21ம் கல்வியாண்டு இணைப்பு அங்கீகாரம் பெற, பொறியியல் கல்லூரிகள் அளித்துள்ள விவரங்களில், சில பேராசிரியா்களின் ஆதாா், நிரந்தர கணக்கு எண் விவரங்கள் தவறாக உள்ளதாகவும், மேலும் சில பேராசிரியா்கள் 2க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவது தெரிய வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன் 100க்கும் மேற்பட்டோர் போலி பிஎச்.டி. பட்டங்களை சமா்ப்பித்து, பணியில் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள பதிவாளர், எனவே கல்லூரிகள், தங்களிடம் பணிபுரியும் பேராசிரியா்களின் பிஎச்.டி. பட்டம் குறித்து, சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகத்திடம் உண்மை தன்மை சான்றிதழை பெற்று, வரும்16ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…