தமிழக மக்கள் தங்கள் நகைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.! வைரலான போலிசெய்தி.!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி, கடந்த ஞாயிற்று கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, அகல்விளக்கு ( அ ) டார்ச் லைட் ஏரியசெய்து கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒற்றுமையாக செயல்படுவோம் என கேட்டுக்கொண்டார்.
அதன்படி, இந்தியாவில் பெரும்பாலானோர் தங்களது வீட்டில் அகல்விளக்கு ஏற்றி ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் முருகன், ‘ தேச நலனுக்காக தமிழக மக்கள் தங்களிடம் இருக்கும் தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் ‘ என கேட்டுக்கொண்டதாக ஒரு செய்தி வேகமாக பரவியது.
பின்னர் இதன் உண்மை தன்மை ஆராயப்பட்டு பின்னர் இது போலி செய்தி என உண்மை தகவல் வெளியானது. இதற்கு முன்னர் ஊரடங்கு மே மாதம் வரை நீட்டிக்கும் என உலக சுகாதார மையம் தெரிவித்ததாக ஓர் போலி செய்தி பரவியது. பின்னர் வைரலாக பரவிய இந்த போலி செய்தியை மறுத்து இந்திய அரசு செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
— Thanthi TV (@ThanthiTV) April 7, 2020