போலி E – Mail – அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் இருப்பதாக கூறி முன் பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானவை என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முன்பதிவு ஜூன் 20 முதல் ஆன்லைனில் தொடங்க உள்ளது. மேலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை குறித்த தவறான தகவல் பரவி வருகிறது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் இருப்பதாக கூறி முன் பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானவை என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட போலி இமெயில் குறித்த விவரத்தையும் அண்ணா பல்கலைக்கழகம் பகிர்ந்துள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளத்தை மட்டுமே அணுக வேண்டும் என தெரிவித்துள்ளது.